2017 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த சர்வதேச வர்த்தக நாமங்களின் தரப்படுத்தலில் 70 ஆம் இடத்தில் Huawei | தினகரன் வாரமஞ்சரி

2017 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த சர்வதேச வர்த்தக நாமங்களின் தரப்படுத்தலில் 70 ஆம் இடத்தில் Huawei

Interbrand வெளியிட்டுள்ள 2017 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்களின் தரப்படுத்தலில் 70 ஆம் இடத்திற்கு Huawei எழுச்சி கண்டுள்ளது

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகநாமப் பெறுமதி தொடர்பில் 14% வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளதுடன், 6,676 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை எட்டியுள்ளது.

முதல் 100 ஸ்தானங்களைப் பிடித்துள்ள வர்த்தகநாமங்களின் பட்டியலில் வர்த்தகநாமப் பெறுமதி தொடர்பில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடையப்பெற்றுள்ள 16 வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது.

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடு, ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு நேர்மை என்ற வர்த்தகநாம கோட்பாட்டின் மீது நிறுவனம் கொண்டுள்ள அதீத நம்பிக்கை ஆகிய அதன் பிரதான விழுமியங்களே Huawei இன் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பின்னாலுள்ள முக்கியமான காரணங்களாகும்.

“கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாம் அடிப்படையில் எமது வர்த்தகநாமத்தின் விழுமியங்களைப் பேணி வந்துள்ளதுடன், புத்தாக்கமான தொழில்நுட்பங்கள், அதியுயர் தர உற்பத்திகள் மற்றும் முதன்மையான சேவைகள், தீவிர ஆர்வ உணர்வும், முற்போக்கும் கொண்ட ஊழியர்கள் ஆகியவற்றின் துணையுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் வெற்றி கண்டுள்ளோம்,” என்று Huawei வர்த்தக சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான கெவின் ஜாங் குறிப்பிட்டார். 

Comments