முடி உதிர்வதைத் தடுக்கும் Forcapil Hair Active | தினகரன் வாரமஞ்சரி

முடி உதிர்வதைத் தடுக்கும் Forcapil Hair Active

அழகான தோற்றத்தையும், கம்பீரத்தையும் வழங்குவதில் தலைமுடி முக்கியமான பங்கினை வகிக்கின்றது. ஆனால் இன்றைய இளைஞர் யுவதிகள் அழகான தலை முடியை பெறமுடியாமல் தவிப்பதை நாம் காண்கிறோம். எனவே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள பலவிதமான தயாரிப்புகள் சந்தையில் இருந்தாலும் அவற்றில் எதுவுமே சரியான தீர்வை வழங்கவில்லை. அதற்கு பிரதானமான காரணம் முடி உதிர்வுக்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளாமையாகும்.

உலகில் 17 வருடகாலமாக பாமசி உற்பத்திகள் அழகுசாதன பொருட்கள், மற்றும் போசனைப் பராமரிப்புப் பொருட்கள் பலவற்றை அறிமுகம் செய்து பாவனையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமான BMEC லைப் ஸ்டைல் (தனியார்) நிறுவனம் Forcapil Hair Active என்றும் பெயரில் உற்பத்தியொன்றை முடி உதிர்வுக்கான வெற்றிகரமான தீர்வாக அறிமுகம் செய்துள்ளது.

தலைமயிருக்கு மேலதிக ஊட்டச்சத்துகளில் IMS தரவுகளின்படி பிரான்சின் முதல்தர தயாரிப்பாக மாறியுள்ள Forcapil Hair Active என்பது முடி உதிர்தல் காரணமாக உங்களது சிரசையும் அதனால் பாதிப்படைந்துள்ள மனசையும், உங்கள் அழகையும் கம்பீரத்தையும் அதிகரிக்கக் கூடிய நிரந்தர இயற்கை அமைந்திருக்கிறது.

Forcapil Hair Active இன் விசேட தன்மை Forcapil Hair Active உற்பத்தியில் பல சிறப்புகள் அடங்கியுள்ளன. அதில் முதலாவதாக அடங்கியுள்ள கெரட்டீன் அக்டிவ் கலவையை குறிப்பிடலாம். முடி உதிர்வுக்கான பிரதான காரணமாக “கெரடினயிசேசன்” செயல்பாடு சரியான முறையில் செயல்படாமையைக் குறிப்பிடலாம்.

இந்த விசேட தயாரிப்பின் மூலம் அச்செயல்பாட்டுக்கு தேவையான மிதியோனயிஸ், சீஸ்டீன் மற்றும் ஹொஸ்டெயில் போன்ற கூறுகளை பெற்றுக் கொடுப்பதோடு அதன் மூலம் முடி உதிர்தலைத் தடுத்து முடியை நன்கு வளரச் செய்யும். அதைத் தவிர மயிர்கால்களின் வேர்வரை ஊட்டத்தை வழங்கி நீண்ட கால இருப்பை உறுதிசெய்கின்றது. இதன்மூலம் தலைமயிரின் நிறமாற்றம். நரைத்தல் என்பவற்றைத் தடுத்த உறுதியான தலைமயிரை வழங்குவதோடு பொடுகையும் தடுக்கின்றது. தற்போது சந்தையில் கிடைக்கும் உற்பத்தி பொருட்களில் அடங்காத கெரனயிசேசனுக்கான அடங்கிய ஒரே தயாரிப்பு Forcapil Hair Active ஆகும். 

Comments