கொழும்பு–யாழ். ரயில் நாவற்குழி வரை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு–யாழ். ரயில் நாவற்குழி வரை

புங்குடுதீவு குறூப் நிருபர்

 

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய ரயில் சேவைகள் யாவும் நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாவற்குழி பாலத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளமையினாலேயே அனைத்துப் ரயில் சேவைகளும் நாவற்குழி ரயில் நிலையத்துடன் மட்டப்படுத்தப்படவுள்ளது.

புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

புனரமைப்பு பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் பஸ் வண்டிகள் மூலம் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ரயில்கள் ஊடாக அவர்களது பயணத்தை தொடர ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் யாழ்.ரயில் நிலையத்தில் தரித்து நிற்கும் ரயில் மூலம் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையான சேவைகள் வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தகவல்களை பெற விரும்புவோர் 021-2222271 என்ற யாழ்.ரயில் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments