‘பொட்டு’ படத்தில் கலக்கத்துடன் நடித்தேன் | தினகரன் வாரமஞ்சரி

‘பொட்டு’ படத்தில் கலக்கத்துடன் நடித்தேன்

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொட்டு’ படத்தில் இரவு நேரத்தில் நிஜ கல்லறையில் தான் கலக்கத்துடன் நடித்ததாக நடிகை இனியா கூறியிருக்கிறார்.

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிக்கும் படம் ‘பொட்டு’. மருத்துவக் கல்லூரி பின்னணியில் பேய் படமாக உருவாகி இருக்கும் இதில், ‘பொட்டம்மாள்’ என்ற கேரக்டரில் இனியா நடிக்கிறார்.

படம் குறித்து கூறிய இனியா, ‘பொட்டு’ மருத்துவ பின்னணியில் நடக்கும் பேய் கதை. பொட்டு என்ற மலைவாழ் இன பெண், நாகரீக பெண் என 2 வேடங்களில் வருகிறேன். பரத் பல கெட்டப்பில் வருகிறார். நமீதா அகோரியாக வருகிறார். இன்னொரு ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

பேய் படத்தில் நடித்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். நிஜ கல்லறையில் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்தினார்கள். கலக்கத்துடன் நடித்தேன். 

Comments