'அவதார்' படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார் | தினகரன் வாரமஞ்சரி

'அவதார்' படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் 'அவதார்' படத்தின் அடுத்த பாகங்களில் நடிக்க 'டைட்டானிக்' படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வசூலைக் குவித்த 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதற்கான பணிகளில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.

வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக 'அவதார்-2' வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ரிலீஸ் செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் ('அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்ட்டிஸ் என பலரும் இருக்கும் நிலையில், 'டைட்டானிக்' படத்தின் மூலம் உலக ரசிகர்களின் உள்ளத்தின் கவர்ந்த டைட்டானிக் ரோஸ் எனப்படும் கேட் வின்ஸ்லெட் 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

20 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments