கொழும்பில் பொது கழிப்பறைகள் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பில் பொது கழிப்பறைகள்

போல் வில்சன்

கொழும்புக்கு ஏதோ ஒரு தேவைக்காக வந்த ஒரு தம்பதியினர் அவசரமாக தனது நண்பனின் அலுவலகத்திற்குச் சென்றனர். நண்பருக்கோ வராத விருந்தினர் மனைவியுடன் வந்ததில் ஒரே ஆச்சரியம். “என்னையா சந்திக்க வந்தீர்கள்?” என்று அவர் கேட்டார், நம்ப முடியாமல். அவர்கள் ரொம்ப அவசரம் என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். நண்பனும் ஒரு புன்னகையுடன் அவர்களுக்கு அலுவலக கழிப்பறையை காண்பித்தான். பின்னர் அங்கு வந்தவர், “மச்சான், ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடிவதில்லையா?” என்று சொல்லி நண்பரின் தோளைத்தட்டினார்.

கொழும்புக்கு வெளியே செல்லும் பயணிகள் கூட பொதுவசதியான கழிப்பறை வசதிகள் இல்லாததால் சில உணவகங்களை நாடிச் சென்று தமது சுமையை இறக்கி வைக்க வேண்டியிருக்கிறது. மலசலக்கூட வசதி என்பது மக்களின் அத்தியாவசிய பொது தேவைகளில் ஒன்று.

கொழும்பு மாநகருக்குள் நாளாந்தம் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பொதுவசதியான மலசல கூடங்கள் மிகவும் குறைவு. வானொலி, தொலைகாட்சி நிறுவனங்களை அண்டியப் பகுதிகளிலும், கறுவாக்காடு போன்ற பிரதான இடங்களிலும் பொதுகழிப்பறைகள் அறவே இல்லை. அங்கு சொந்தத் தேவைகளுக்கு செல்லும் மக்கள் கழிப்பறைகளுக்கு பிரதான அலுவலகங்கள் அங்குள்ள மண்டபங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. இப்படியான இடங்களுக்குச் செல்லும் பாமரமக்கள் மற்றும் பெண்கள் எங்கு செல்வார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கொழும்பு நகரத்திற்குள் அல்லது பிரதான நகரங்களுக்குச் செல்லும் ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்கு ஆங்காங்கே மரத்தடி போன்ற மறைவான இடங்களுக்குச் செல்ல முடிந்தாலும் பெண்கள் எங்கே செல்வார்கள்? அவர்கள் சீறுநீரை அடக்கி வைத்து அதனூடாக சரீர ரீதியான உபாதைக்குள்ளாவதை பலர் சொல்ல கேட்டுள்ளோம். அதேநேரத்தில் சில கழிப்பறைகள் பாவனைக்கு உகந்தவையாக இல்லை. துர்நாற்றத்துடன், கால்வைக்க முடியாமல் ஆங்காங்கே கொட்டப்பட்ட சிறுநீர், எச்சில், வெற்றிலை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி வாரமஞ்சரி பத்திரிகையில் யாழ்தேவி புகையிரதத்தில் சீரான, சுத்தமான மலசலக்கூடங்கள் இல்லாததைக் குறித்து விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதனை குறித்து அநேகரின் புகார்கள் எம்மிடம் தெரிவிக்கப்பட்டன. யாழ்தேவியில் மட்டுமல்ல ஏனைய தொலைத்தூர ரயில்களிலும் இத்துர்ப்பாக்கிய நிலைமையே காணப்படுவதாகவும், பல புகையிரத நிலைய மலசலக் கூடங்களிலும் துர்நாற்றத்துடன், சுகாதார வசதிகளின்றியும் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். விசேடமாக பெண்கள் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரத்தில் சில பாடசாலை குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், சில பாடசாலைகளிலும் மலசலக்கூடங்கள் மிகவும் அசுத்தமாகவே காணப்படுவதாக்க் கூறுகின்றனர். பிள்ளைகளும் அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே நேரத்தில் அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மலசலக்கூடங்கள் கூட நோயாளிகளும், அங்கு வந்து பயன்படுத்துபவர்களும் முறையற்று பயன்படுத்துவதால் அசுத்தமடைகின்றன. சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கின்றன.

சிலருக்கு சரும நோய்கள் உருவாக காரணமாக இருப்பது இந்த மலசலக்கூடங்களே. அத்துடன், தொற்றுவியாதிகளும் பரவுகின்றன. இந்த மலசலக்கூடங்களில் அதிகம் பாதிப்புறுவது பெண்களே என்றார் இன்னுமொரு நபர்.

சுமார் நான்கு தசப்தகாலத்திற்கு முன்னர் கொழும்பு மாநகரில் பொதுகழிப்பறைகளும், கொழும்புக்கு வெளியே வாளிக்ககூஸ் என்று அழைக்கப்படும் கழிப்பறைகளும் காணப்பட்டன. இக்கழிப்பறையில் குந்தி அமர்ந்தால் ஒரு வாளி வைக்கப்பட்டிருக்கும். அதனை நகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நாளாந்தம் காலையில் எடுத்து தாம் கொண்டு வரும் வாளியில் கவிழ்த்து விட்டு அதைத் திரும்பவும் அதே இடத்தில் வைத்து விடுவார்.

அவர்கள் ஒரு கைவண்டியில் (தற்போது வீதிகளில் குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கைவண்டிக்கு ஒப்பானது) மலத்தை சேகரித்து சுத்தம் செய்வார்கள். அந்த கைவண்டி வீதியில் வரும்போது துர்மணம் வீசும். இதை ஒரு குறிப்பிட்ட சாதியினரே மேற்கொண்டு வந்தனர். இவர்களையே மலசலக்கூட சுத்திகரிப்பு மற்றும் வடிகான் சுத்திகரிப்பு, கழிவறை குழிகளை சுத்திகரிக்க அக்காலத்தில் பயன்படுத்தினர். வாளி கக்கூஸ் முறை முடிவுக்கு வந்ததும் அச்சந்ததியினர் அத்தொழிலிருந்து வெளியேறினர். அத்துடன் நகர சபை, மாநகர சபைகள் சுத்திகரிப்பு தொழிலாளர்களை படிப்படியாக குறைவடைந்து இன்று நகர சபையில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எனப்படுவோர் இல்லை.

அக்காலத்தில் கொழும்பிலுள்ள பெரும்பாலும் தோட்ட அல்லது இணைப்பு வீடுகளில் பொதுமலசலக்கூடங்களே காணப்பட்டன. அவற்றை சுத்தம் செய்ய நகர சபையிலிருந்து தொழிலாளர் வந்தனர். இன்று அந்நிலை மாறிவிட்டது. நகரங்களிலுள்ள வீடுகளிற்குள்ளே நவீன வசதிகளுடன் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் அரச சார்பற்ற இயக்கங்கள் மலசலக்கூடங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. இந்தியாவில் கழிப்பறை இல்லாத இல்லத்தில் வாழ வேண்டாம் கோஷம் ஒரு திட்டமாகவே முன்வைக்கப்பட்டு பெரும்பாலான வீடுகளில் இன்று மலசலக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் கிராமங்களானாலும் பின்தங்கிய கிராமங்களானாலும் மலசலக்கூடங்கள் காணப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு இதை சாதித்துள்ளது. கொழும்பு மாநகரத்திலுள்ள பொதுமலசலக்கூடங்கள் குறித்து, கொழும்பு மாநகர பொறியியலாளர் எம். ஏ. சி. எம். பஸலிடம் இதைப் பற்றி கேட்டோம். 

“பல வருடங்களுக்கு முன்பு இதற்கென பிரத்தியேக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் தற்போது பொதுமலசலக்கூட சுத்திகரிப்புக்கு தொழிலாளர்கள் இல்லை. அத்துடன், கொழும்பு மாநகரில் உள்ள பொதுமலசலக்கூடங்கள் 17 கேள்விமனு அனுப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிருள வீதி, பொரல்ல, கிருலப்பனை ஆகிய இடங்களில் புதிதாக மலசலக்கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அத்துடன் ஆறு மலசகலக்கூடங்கள் புதிய பொலிவுடன் மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளன” என்றார் இவர்.

கொச்சிக்கடை, ஹெட்டியாவத்தை போன்ற இடங்களில் உள்ள மலசகலக்கூடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு ஏற்றதாக இல்லை என்பதையும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் இவை அமைந்திருப்பதையும் அவரிடம் சுட்டுக்காட்டினோம்.

“ஆம் அவைகளும் மீள்புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன” என்று பதிலளித்தார்.

மலசலக்கூடங்களில் இடத்திற்கு இடம் 10 ரூபா, 20 ரூபா என்ற ரீதியில் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் குறித்து கேள்வி எழுப்பிய போது, “10 ரூபாவே அறவிடப்பட வேண்டும்” என்றார். அத்துடன் மலசலக்கூடம் நகர சபையினால் பராமரிக்க ஒவ்வொரு மலசலக்கூடங்களுக்கும் மாதாந்தம் சுமார் ஐந்து இலட்சம் செலவிட வேண்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே கேள்விமனு மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள்ள பொது மலசலக்கூடங்கள் குறித்து முறைப்பாடுகள் இருக்குமானால் கொழும்பு மாநகர சபைக்கு அறிவிக்கலாம் என்றார்.

தனிநபரால் நடாத்தப்படும் பொதுமலசல மேற்பார்வையாளரான அ. குமாரிடம் பேசினோம். தனிநபரால் நடத்தப்படும் மலசலக்கூடங்கள் நாளாந்தம் மூன்று வேலை சுத்திகரிக்கப்படுகிறது. காலையில் இரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். அத்துடன் இங்கு வந்து செல்பவர்கள் கழிப்பறைகளை துஷ்பிரயோகம் செய்கினற்னர் என்று சொன்னவர், “வந்து பாருங்கள்” என்று எம்மை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு சிறிய சாராய போத்தல்கள், பியர் டின், ஆணுறைகள், அங்காங்கே சுவர்களில் எழுதப்பட்டுள்ள கெட்டவார்த்தைகள், வெற்றிலை எச்சில் என்பனவற்றை சுட்டிக்காட்டினார். அத்துடன் சிகரட் துண்டுகளும் காகிதங்களும் காணப்பட்டன. இவை அங்கு மிங்குமாக சிதறிக் கிடந்தன.

இதைத் தடுக்க முடியாதா குமார்?

“நாம் வாசலில் நின்றுதான் பணம் வசூலிக்கிறோம. ஒரு வாசல் பெண்களுக்குரியது, மற்றைய வாசல் ஆண்களுக்குரியது. அவர்களின் பின்னால் செல்ல எமக்கு அதிகாரமில்லை.

நாம் பத்து ரூபா தான் அறவிட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதேநேரத்தில் சிலர் இரண்டு ரூபாவும் கொடுத்துவிட்டு செல்வதுண்டு என்றார். மதகுருமார், பாடசாலை மாணவர்கள், அங்கவீனர்களிடம் நாம் பணம் அறவிடுவதில்லை.

இம்மலசலக்கூடங்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டுள்ளன. மூன்று வேலை சுத்திகரிப்பு செய்கிறோம். அத்துடன் மூன்று சுற்றுகளாக எமது தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் குமார்.

சில இடங்களில் நீர் கழிவுகள் வெளியே ஓடுவதை குறிப்பிட்ட பயனாளர்கள், இவை எமது சூழலுக்கு பங்கத்தை விளைவிக்கின்றது என்றும் இவை கொழும்பு மாநகர சபையினால் சுத்திகரிக்கப்படுவதில்லை என்றும் குறைப்பட்டனர். இக்குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? சுத்தமாயிருப்பதற்கு நாமும் தான் சுத்தமான சூழலை உருவாக்க உதவ வேண்டும். சுத்தம் சுகம் தரும். எமது வீட்டு மலசலக்கூடத்தைப் போன்றே பொது இடங்களிலுள்ள மலசலக்கூடங்களை பயன்படுத்தப்பட வேண்டும்.

“பல வருடங்களுக்கு முன்பு இதற்கென பிரத்தியேக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் தற்போது பொதுமலசலக்கூட சுத்திகரிப்புக்கு தொழிலாளர்கள் இல்லை. அத்துடன், கொழும்பு மாநகரில் உள்ள பொதுமலசலக்கூடங்கள் 17 கேள்விமனு அனுப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிருள வீதி, பொரல்ல, கிருலப்பனை ஆகிய இடங்களில் புதிதாக மலசலக்கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அத்துடன் ஆறு மலசகலக்கூடங்கள் புதிய பொலிவுடன் மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளன” என்றார் இவர்.

கொச்சிக்கடை, ஹெட்டியாவத்தை போன்ற இடங்களில் உள்ள மலசகலக்கூடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு ஏற்றதாக இல்லை என்பதையும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் இவை அமைந்திருப்பதையும் அவரிடம் சுட்டுக்காட்டினோம்.

“ஆம் அவைகளும் மீள்புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளன” என்று பதிலளித்தார்.

மலசலக்கூடங்களில் இடத்திற்கு இடம் 10 ரூபா, 20 ரூபா என்ற ரீதியில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, “10 ரூபாவே அறவிடப்பட வேண்டும்” என்றார். அத்துடன் மலசலக்கூடம் நகர சபையினால் பராமரிக்க ஒவ்வொரு மலசலக்கூடங்களுக்கும் மாதாந்தம் சுமார் ஐந்து இலட்சம் செலவிட வேண்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே கேள்விமனு மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள்ள பொது மலசலக்கூடங்கள் குறித்து முறைப்பாடுகள் இருக்குமானால் கொழும்பு மாநகர சபைக்கு அறிவிக்கலாம் என்றார்.

தனிநபரால் நடாத்தப்படும் பொதுமலசல மேற்பார்வையாளரான அ. குமாரிடம் பேசினோம். தனிநபரால் நடத்தப்படும் மலசலக்கூடங்கள் நாளாந்தம் மூன்று வேலை சுத்திகரிக்கப்படுகிறது. காலையில் இரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். அத்துடன் இங்கு வந்து செல்பவர்கள் கழிப்பறைகளை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்று சொன்னவர், “வந்து பாருங்கள்” என்று எம்மை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு சிறிய சாராய போத்தல்கள், பியர் டின், ஆணுறைகள், அங்காங்கே சுவர்களில் எழுதப்பட்டுள்ள கெட்டவார்த்தைகள், வெற்றிலை எச்சில் என்பனவற்றை சுட்டிக்காட்டினார். அத்துடன் சிகரட் துண்டுகளும் காகிதங்களும் காணப்பட்டன. இவை அங்கு மிங்குமாக சிதறிக் கிடந்தன.

இதைத் தடுக்க முடியாதா குமார்?

“நாம் வாசலில் நின்றுதான் பணம் வசூலிக்கிறோம். ஒரு வாசல் பெண்களுக்குரியது, மற்றைய வாசல் ஆண்களுக்குரியது. அவர்களின் பின்னால் செல்ல எமக்கு அதிகாரமில்லை.

நாம் பத்து ரூபா தான் அறவிட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், அதேநேரத்தில் சிலர் இரண்டு ரூபாவும் கொடுத்துவிட்டு செல்வதுண்டு என்றார். மதகுருமார், பாடசாலை மாணவர்கள், அங்கவீனர்களிடம் நாம் பணம் அறவிடுவதில்லை.

இம்மலசலக்கூடங்கள் 24 மணி நேரமும் திறக்கப்பட்டுள்ளன. மூன்று வேலை சுத்திகரிப்பு செய்கிறோம். அத்துடன், மூன்று சுற்றுகளாக எமது தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் குமார்.

சில இடங்களில் நீர் கழிவுகள் வெளியே ஓடுவதை குறிப்பிட்ட பயனாளர்கள், இவை எமது சூழலுக்கு பங்கத்தை விளைவிக்கின்றது என்றும் இவை கொழும்பு மாநகர சபையினால் சுத்திகரிக்கப்படுவதில்லை என்றும் குறைப்பட்டனர். இக்குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு? சுத்தமாயிருப்பதற்கு நாமும் தான் சுத்தமான சூழலை உருவாக்க உதவ வேண்டும். சுத்தம் சுகம் தரும். எமது வீட்டு மலசலக்கூடத்தைப் போன்றே பொது இடங்களிலுள்ள மலசலக்கூடங்களை பயன்படுத்தப்பட வேண்டும். 

Comments