சென்னை வந்த சின்னம்மா நேற்று கணவனை சந்தித்தார் | தினகரன் வாரமஞ்சரி

சென்னை வந்த சின்னம்மா நேற்று கணவனை சந்தித்தார்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் வி.கே. சசிகலா பரோலில் (தற்காலிகப் பிணை) நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு சென்னை வந்தடைந்ததும், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பெரம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனை,நேற்றுக்காலை சந்தித்து நலம் விசாரித்தார். நேற்றுக்காலை சென்னையிலிருந்து புறப்பட்டு பெரம்பாக்கம் சென்ற அவர், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை குளோபல் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நாட்களில் அரசியல் ரீதியான சந்திப்புக்களை நடத்தவோ, ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதோ கூடாது. மருத்துவனையில் இருக்கும் கணவர் நடராஜனை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அல்லது வீட்டில் எந்தவொரு பார்வையாளரையும் சந்திப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்பது உட்பட நான்கு நிபந்தனையின்பேரில் சசிகலாவை நீதிமன்றம் பரோலில் அனுப்பியுள்ளது. 

Comments