மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய Singer Fashion Show 2017 | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய Singer Fashion Show 2017

Singer Fashion Academy இல் டிப்ளோமா கற்கையை முன்னெடுக்கும் மாணவர்களின் வடிவமைப்புக்கள் மற்றும் படைப்புக்களை வெளிக்காண்பிக்கும் வருடாந்த நிகழ்வான Singer Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு 2017 அண்மையில் பிஷப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Fashion Show இடம்பெற்ற சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருதுகள் நிகழ்வில் அவர்களுடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

Fashion Show மற்றும் விருதுகள் நிகழ்வு ஆகியன ஆண்டுதோறும் இடம்பெற்றுவருவதுடன், Singer Fashion Academy இன் பிரதான நிகழ்வுகளாகவும் இவை கருதப்படுகின்றன. பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் முன்னிலையில் ஒய்யார நடை (catwalk) மூலமாக டிப்ளோமா மாணவர்கள் தமது படைப்பாக்கத் திறமைகளை காண்பிக்கவும் இது வாய்ப்பளிக்கின்றது. அதன் மூலமாக அவர்கள் தமது தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மட்டுமன்றி, விசாலமான மட்டத்தில் வர்த்தகரீதியான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் வழிகோலுகின்றது.

கண்டிய ஆடையணி, அலுவலக ஆடையணி, சிறுவர்களு க்கான ஆடையணி, விளையாட்டு ஆடையணி, மாலைப்பொழுது ஆடையணி, வழக்கமான ஆடையணி மற்றும் இந்திய ஆடையணி என 7 கவர்ச்சியான நவநாகரிக பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற Fashion Show நிகழ்வுடன் ஒன்றியதாக விருது வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. வெற்றியாளர், 2 ஆம் இடத்திற்கான வெற்றியாளர் மற்றும் 3 ஆம் இடத்திற்கான வெற்றியாளர் என்ற தெரிவு அடிப்படையில் Fashion Show பரிசுகளின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் ரீதியிலான ஆடை தயாரிப்பு டிப்ளோமா கற்கைநெறி மற்றும் தையல் இயந்திர பூத் தையல் டிப்ளோமா கற்கைநெறி ஆகியவற்றை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த அனைத்து மாணவர்களுக்கு விருதுகள் நிகழ்வில் தமக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட நவநாகரிக பிரிவுகளின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கும் அவர்களுடைய முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்களும், பெறுமதிமிக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. Fashion Show நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பங்குபற்றியமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டிப்ளோமா பரீட்சைகளில் அனைத்திலங்கை ரீதியில் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்றவருக்கும் நவீன, இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய தையல் இயந்திரங்கள் நிகழ்வில் வழங்கப்பட்ட பெறுமதிமிக்க பரிசுகளில் அடங்கியிருந்தன. 

Comments