ஜனாதிபதி இன்று நியூயோர்க் பயணம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி இன்று நியூயோர்க் பயணம்

ஐ.நா.பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்கா (நியூயோர்க்) புறப்பட்டு செல்லவுள்ளார்.

பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளார். அரசின் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசிலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனது உரையின் போது தெளிவுபடுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் சின்சிரோ அபே, ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின், கனேடிய பிரதமர் டுருடூ ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை முதற் தடவையாகச் சந்திக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும் இராப்போசன விருந்திலும் ஜனாதிபதிமைத்திரிபால பங்கேற்கவுள்ளாரெனத் தெரியவருகிறது.

 

Comments