9 வருடங்களின் பின் கிழக்கில் அம்பாறை மாவட்டம் முதலிடம்! | தினகரன் வாரமஞ்சரி

9 வருடங்களின் பின் கிழக்கில் அம்பாறை மாவட்டம் முதலிடம்!

(காரைதீவு குறூப் நிருபர்)

கிழக்குமாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் கடந்த 9 வருடங்களின் பின்னர் முதற்றடவையாக அம்பாறை மாவட்டம் முதலிடம் பெற்று மாகாண சாம்பியனாகத்தெரிவுசெய்யப்பட்டது.
திருகோணமலை கந்தளாய் விளையாட்டு மைதானத்தில் கடந்த இருநாட்களில் (புதன் வியாழன்) நடைபெற்ற இறுதி மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப்பணிப்பாளர் என் .மணிவண்ணன் தலைமையில்இடம்பெற்றன.
புதனன்றுமாலை கிழக்குமாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம பிரதமஅதிதியாக கலந்கொதுண்டு தேசியக்கொடியேற்றி நிகழ்ச்சியை அங்குரார்ப்பணம்செய்துவைத்தார்.
வியாழனன்று மாலை ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கிவைத்தார்.
2017ஆம் அண்டுக்கான மாகாண மட்ட போட்டிகளில் அம்பாறை மாவட்டம் முதலிடத்தையும் இரண்டாம் இடத்தை திருகோணமலை மாவட்டமும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் சுவீகரித்துக்கொண்டன.
வடக்கு கிழக்கு பிரிந்த பிற்பாடு அம்பாறை மாவட்டம் 9,வருடங்களின் பின்னர் பெற்ற முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பெற்ற அம்பாறை மாவட்டத்திற்கான சம்பியன் கிண்ணத்தை அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வேலுப்பிள்ளை ஈஸ்வரனுக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன வழங்கிவைத்தார்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் பயிற்றுனர்கள் வீர,வீராங்கனைகள் இறுதியில் குழுப்படமொன்றை அதிதிகளோடு எடுத்துக்கொண்டனர். 

Comments