டெங்கு நோய், ஆபத்தான கர்ப்பகால உயர்மட்ட பாதுகாப்பை வழங்கும் வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை | தினகரன் வாரமஞ்சரி

டெங்கு நோய், ஆபத்தான கர்ப்பகால உயர்மட்ட பாதுகாப்பை வழங்கும் வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை

வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 2,000 ற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றிருப்பதோடு, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கு டெங்கு வைரஸ் தொற்று காணப்பட்டமை மேலும் சிக்கலான நிலையை தோற்றுவித்தது.

அத்தகையதொரு கர்ப்பிணிப்பெண் ஒரு நாள் தான் தாயாவேன் என்ற தனது எண்ணத்தை கைவிட்டுவிட்டார். காரணம் அவர் இதற்கு முன்னர் 3 கருச்சிதைவுகளை எதிர்கொண்டுள்ளார். மேலும் உயர் குருதியழுத்தம், நீரிழிவு, ஹைப்போ தைரோயிட், ‘Factor Eight’ என அழைக்கப்படும் அரிய குருதிச்சிக்கல் போன்ற அவரது மருத்துவ வரலாறு காரணமாக அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தல் மிகவும் ஆபத்தான விடயமென மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். 35ஆவது வயதில் இருந்த அவர் தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில் 4ஆவது முறையாக அவர் கர்ப்பம் தரித்தபோது, அது சாத்தியமடைய வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

ஹேமாஸ் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மருத்துவர் டாக்டர் இந்திரா வாடியநம்பியாரச்சி, “நோயாளர்களுக்கான வழமையான மருத்துவ பரிசோதனை விஜயத்தின் போது, 36 வார கால கர்ப்பிணித் தாயொருவர் லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் குறித்து என்னிடம் புகாரளித்தார். நான் உடனடியாக அவரை டெங்கு நோய் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினேன். பரிசோதனையில் அவருக்கு டெங்கு நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்ட போது அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். 

 

Comments