உறுதிமிக்க செயற்பாட்டினை வெளிப்படுத்தும் செலான் குழுமம் | தினகரன் வாரமஞ்சரி

உறுதிமிக்க செயற்பாட்டினை வெளிப்படுத்தும் செலான் குழுமம்

செலான் வங்கி மற்றும் அதனது குழுமம் ஆகியவை, 2017 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் சிறப்பான நிதிப் பெறுபேறுகளை பெற்றுக் கொண்டதன் மூலம் உறுதிமிக்க வளர்ச்சி வேகம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. இக் காலப்பகுதியில் செலான் குழுமம், வரிக்குப் பின்னரான தேறிய இலாபமாக ரூபா 2,310 மில்லியனை பதிவு செய்திருக்கின்றது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32% அதிகாிப்பாகும்.

செலான் வங்கியானது வரிக்கு பிந்திய இலாபமாக ரூபா 1,805 மில்லியனைப் பெற்றுக் கொண்ட நிலையில் 2017 ஜூன் 30ஆம் திகதியன்று இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களை நிறைவு செய்திருக்கின்றது. 2016ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கி பதிவுசெய்த ரூபா 1,755 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 2.87% அதிகாிப்பாக காணப்படுகின்றது. சவாலான வியாபாரச் சூழல் மற்றும் NPA மீது மேற்கொள்ளப்பட்ட விவேகமான பெறுமதிக் குறைப்பு ஏற்பாடுகள் என்பவற்றுக்கு மத்தியிலும் செலான் வங்கி முதல் ஆறு மாதங்களில் ஒரு சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றது.

இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இருந்தான நிலுவைத் தொகையை செலுத்துவதில் வங்கி அனுபவித்த தாமதநிலையின் காரணமாக NPA மீது பெறுமதிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்காவிடின், பாதுகாப்பளிக்கப்பட்ட கடன் வழங்குனா் என்ற வகையில் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை கடனை கொடுத்துத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ள சூழலில் அதிலிருந்து மற்றுமொரு கொடுப்பனவு தொகை கிடைக்கப் பெறக் கூடியதாக இருப்பதை கருத்திற் கொள்ளும் போது, செலான் வங்கியானது ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில் வாிக்குப் பின்னரான இலாபத்தில் 21% இற்கும் அதிகமான இலாபத்தை அடையப் பெறும் எனலாம்.

2016 ஒக்டோபர் மாதத்தில் ‘பிட்ச்’ நிறுவனமானது செலான் வங்கியின் தரப்படுத்தலை மீளாய்வு செய்திருந்ததுடன், 2017 ஜனவரி மாதத்தில் உறுதியான கண்ணோட்டத்துடன் வங்கிக்கு ‘A-lka’ தரப்படுத்தலை உறுதிப்படுத்தி இருக்கின்றது. 

Comments