உண்மையான போல்கன் உணவுச் சுவையை இலங்கையில் அறிமுகப்படுத்தும் மிட்சி | தினகரன் வாரமஞ்சரி

உண்மையான போல்கன் உணவுச் சுவையை இலங்கையில் அறிமுகப்படுத்தும் மிட்சி

இலங்கையின் சமையல்கலை தனித்துவமாக வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், இலங்கையின் முதன் முதலான மத்தியதரைக்கடல் உணவகமான, போல்கன் உணவுகளில் நிபுணத்துவம் பெற்ற Mitsi’s Delicacies தனது அண்மைய சமையல் இரகசியங்களை போல்கன் உணவுத் திருவிழாவில் காண்பிக்கவுள்ளது.

மத்தியதரைக்கடல் உணவுத் திருவிழாவானது தனித்துவமானதாய் இருக்கும். கலப்பற்ற, சுவையான சேர்பிய உணவு வகைகளிலேயே கவனம் செலுத்தவுள்ளதால் அந்த வகையிலான சமையல் அனுபவத்தினை இலங்கையின் உணவுப் பிரியர்களுக்கு முதல் தடவையாக வழங்கவுள்ளது. எனவே அனைத்து உணவுப் பிரியர்களையும் 34 A, பகத்தலை வீதி கொழும்பு 03 எனும் முகவரிக்கு வருமாறு அழைக்கின்றோம்' என்று மகிழ்வுடன் கூறினார் 2012 இல் Mitsi’s Delicacies யினை ஆரம்பித்த 'மிட்சி'.

சிறந்த மத்தியதரைக்கடல் உணவின் கொண்டாட்டமானது, செப்டெம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பாரம்பரியமான மத்தியதரைக்கடல் உணவுகளைச் சுவைத்திட 0777 163 090 எனும் இலக்கத்தினையோ அல்லது mitsis.lk எனும் இணையதள முகவரியினையோ நாடி முன்பதிவுசெய்து கொள்ளுங்கள்.

மிட்சிஸ் டெலிகசியின் நிர்வாகச் சமையல்காரரரான டிஜான் போன்கோவிக்கும் அவரது சமையல் குழுவும் இலங்கையில் உணவகங்கள் தொடர்பில் தெளிவான பார்வையினைக் கொண்டவர்களை சேர்பியாவின் அடையாள தேசிய உணவான ஜேஸ்காவிக்கா உள்ளிட்ட சுவையான உணவுகளைச் சுவைக்கும் அனுபவத்தினைத் தரவுள்ளனர். இந்த தேவாமிர்தத்துக்கு ஒப்பான உணவானது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி அல்லது கோழியிறைச்சி, வெங்காயம், கஜ்மாக் (பால்கிறீம்) அஜ்வார் (சேர்பியாவின் வறுக்கப்பட்ட செம்மிளகு) மற்றும் உர்னெபேஸ் (மசாலா சீஸ் சலட்) என்பனவற்றால் உருவாக்கப்படுவதுடன் பக்க உணவுகள் மற்றும் லெபின்ஜா எனும் தட்டையான பாணுடன் பரிமாறப்படலாம்.

'ஜேஸ்காவிக்கா என்பது சேர்பியாவின் அடையாளமாகியுள்ளதோடு ஐரோப்பாவெங்கனும் உள்ள விசேட உணவகங்களில் பரிமாறப்படுகின்றது. இலங்கையின் உணவுப் பிரியர்கள் எங்களது பாரம்பரியமான சேர்பிய உணவினை விரும்புவார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை' என்றார் டிஜான். 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.