ஆடைத் தொழிற்சாலை உற்பத்திக்கான CEMS – GLOBAL’s சர்வதேச கண்காட்சி | தினகரன் வாரமஞ்சரி

ஆடைத் தொழிற்சாலை உற்பத்திக்கான CEMS – GLOBAL’s சர்வதேச கண்காட்சி

CEMS – GLOBAL ஏற்பாட்டில் துணி வகைகளும், ஆடைத் தொழிலும் (துணிகள் மற்றும் நூல்கள்) மற்றும் ஏற்பாட்டியலும் மற்றும் வீட்டு ஆடை உற்பத்திக்கான கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெறும்.​

இக்கண்காட்சியில் ஆடை உற்பத்திக்கான சர்வதேச ரீதியிலான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும். இக்காட்சியின் மூன்று தினங்களில் பிரதானமாக “9th Colombo International Yarn & Fabric Show 2017”, “International Home Textile Sri Lanka Expo 2017”, “Sri Lanka International Air Freight, Shipping & Logistics Expo 2017” கண்காட்சியும் இடம்பெறும்

இந்நிகழ்வில் தேசிய இயக்குநர் Ejaz Sarwar உட்பட CEMS – GLOBAL அதிகாரிகளான திலானி வீரரட்ன, றொஹான் மசகோரல கருத்து தெரிவித்தனர்,

இங்கு கருத்து தெரிவித்த றொஹான், ஆடைத் தொழிற்சாலைக்கான துணிகளும், நூல்களும் கண்காட்சியூடாக எமது ஏற்றமதியை மையமாக்க கொண்டதுடன், எமது கொழும்பு துறைமுகம் தென் கிழக்கு ஆசியாவில் முக்கியத்துவத்தைப் பெறும் என்றார்.

அத்துடன், ஜி.எஸ்.பி. இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஆடை உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து எமது தேசிய வருமானத்தை அதிகரிக்கலாம். இதை எமது வரைவுக்கு முக்கியத்துவம் பெறும். எமது வரைபுக்குள் வைத்துக் கொண்டு ஆடை உற்பத்தி வருமானத்தை 60 பில்லியானாக உயர்த்தலாம் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டது.

CEMS - USAயும் CEMS Lankaவும் ஒன்றிணைந்து ஒரே கூரைக்குள் ‘Colombo International Yarn & Fabric Show 2017 – Full Editionனும், International Home Textile Sri Lanka Expo 2017 மற்றும் 2nd Sri Lanka International Air Freight, Shipping & Logistics Expo 2017 இக்கண்காட்சி நிகழ்வுகள் நடைபெறும். இதில் ஐந்து நாடுகளைச் சேர்ந்த 150 காட்சி கூடங்களும் இடம்பெறும். 

Comments