பொலிஸ் உத்தியோகத்தர் 2,599 பேருக்கு பதவி உயர்வு | தினகரன் வாரமஞ்சரி

பொலிஸ் உத்தியோகத்தர் 2,599 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பொலிஸ் திணைக்களம் பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது. பொலிஸ் கொன்ஸ்டபிள் தரத்திலுள்ள 2,075 பேர் பொலிஸ் சார்ஜண்டுகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி தரத்திலுள்ள 292 பேர் பொலிஸ் சாரதி சார்ஜண்டுகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

பொலிஸ் சார்ஜண்ட் தரத்திலுள்ள 189 பேர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். பெண் பொலிஸ் சார்ஜண்ட் தரத்திலுள்ள 34 பேர் பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சார்ஜண்ட் சாரதி தரத்திலுள்ள 09 பேர் போக்குவரத்து பிரிவு உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இப் பதவி உயர்வுகளை பொலிஸ் மாஅதிபர் வழங்கியுள்ளார். 

Comments