அரசியலமைப்பு குழுவுக்கு தமிழ் கூட்டமைப்பும் அறிக்ைக சமர்ப்பிப்பு | தினகரன் வாரமஞ்சரி

அரசியலமைப்பு குழுவுக்கு தமிழ் கூட்டமைப்பும் அறிக்ைக சமர்ப்பிப்பு

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைவு தயாராகும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது நிலைப்பாட்டை அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது. இதனுடைய ஆவண நகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்பின் ஆவணத்தில் கட்சி சார்பான வழிநடத்தல் குழு உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர். இந்த அறிக்கை கடந்த 30ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 

Comments