விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி தான்யா | தினகரன் வாரமஞ்சரி

விஜய் சேதுபதியுடன் நடித்தது என் வெற்றி தான்யா

சசிகுமார் நடித்த ‘பலே வெள்ளையத் தேவா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான்யா. அடுத்து அருள்நிதியுடன் ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான இவர் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள படம் ‘கருப்பன்’. விரைவில் திரைக்கு வர தயாராகும் இதில் நடித்தது பற்றி கூறிய தான்யா.

“இந்த படம் மதுரை கதை களத்தில் உருவாகி இருக்கிறது. அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். அந்த பெயருக்கு ஏற்ப அன்பான பெண்ணாக நடித்து இருக்கிறேன். இதில் நான் முழுமையான மதுரை பெண்ணாகவே மாறி நடித்துள்ளேன்.

இந்த படத்தில், விஜய்சேதுபதியுடன் நடித்திருப்பதை என் வெற்றியாகவே கருதுகிறேன். இதற்கு முன்பு நடித்த 2 படங்களிலும் நானே டப்பிங் பேசினேன். ‘கருப்பன்’ படம் முழுக்க முழுக்க மதுரை மண்வாசனை கதையில் உருவாகி இருக்கிறது.

நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். மதுரை தமிழை தெளிவாக பேச முடிய வில்லை. ஆகவே, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் இதில் எனக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இதில் முழுமையான மதுரை பெண்ணாக வருவது, எனது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. 

Comments