Ocean Breeze சொகுசு தொடர்மனை நீர்கொழும்பில் | தினகரன் வாரமஞ்சரி

Ocean Breeze சொகுசு தொடர்மனை நீர்கொழும்பில்

சொகுசான வாழ்விடங்களை அமைக்கும் தனது பயணத்தில் 14வது சொகுசு தொடர்மனை செயற்திட்டத்தை குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் அறிமுகம் செய்துள்ளது. Ocean Breeze Negombo என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர்மனையில் தமக்குரிய குடிமனைகளை கொள்வனவு செய்ய முன்வந்த முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு உடன்படிக்கைகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் தலைவர் தசுன் விக்ரமரட்ன இத்திட்டம் தொடர்பில் விளக்கமளித்தார். இலங்கையின் புகழ்பெற்ற கடற்கரையை அண்மித்த நீர்கொழும்பு பகுதியில் இக்குடியிருப்புத் தொடர்மனை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு துரிதமாக பயணிக்கக்கூடிய தூரத்தில் அமையவுள்ளது.

Ocean Breeze முதலீட்டாளர்களுக்கு வருடம் முழுவதும் வருமானத்தை ஈட்டிக்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளதுடன், சொகுசு வசதிகள் மற்றும் அமைவிடம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறையை நாடுவோருக்கு இந்தத் தொடர்மனையில் காணப்படும் இல்லங்களை வாடகைக்கு வழங்கி, அதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளமுடியும். குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் மூலமாக முன்னெடுக்கப்படும் நான்கு செயற்திட்டங்களில், Ocean Breeze ஆனது, பாரியளவிலான திட்டமாக அமைந்துள்ளது.

ஹோட்டல் தொடரைப் போன்று, 196 அலகுகளை கொண்டுள்ள இந்த தொடர்மனைகள் 8.6 மில்லியன் ரூபாவிலிருந்து விற்பனை செய்யப்படவுள்ளது. நீர்கொழும்பு புகழ்பெற்ற சுற்றுலாப்பகுதியாக அமைந்துள்ளது. வருடம் முழுவதும் இந்தப்பகுதி மக்களால் நிறைந்து காணப்படுகிறது. விமான நிலையத்தை அண்மித்தும், கடற்கரைக்கு முகப்பாகவும், முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைந்திருக்கும். அத்துடன், தமக்கும் தமது சொந்த விடுமுறையை கழிக்க சொகுசான ஒருபகுதியின் உரிமையாளராக திகழமுடியும். முக்கியமாக, வாடிக்கையாளர் சார்பாக, குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் இனால் அலகுகள் வாடகைக்கு விடப்பட்டு, பராமரிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு Ocean Breeze நீண்டகால அடிப்படையில் நிச்சயம் வருமானத்தை பெற்றுத்தரக்கூடிய திட்டமாக அமைந்திருக்கும் என்றார். 

Comments