சமூக ஊடக தினத்தை தொடர்ச்சியான 6வது ஆண்டாக முன்னெடுத்த எடிசலாட் | தினகரன் வாரமஞ்சரி

சமூக ஊடக தினத்தை தொடர்ச்சியான 6வது ஆண்டாக முன்னெடுத்த எடிசலாட்

ஜுன் 30ம் திகதி உலகளாவிய ரீதியில் வருடாந்த சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்ட நிலையில், எடிசலாட் லங்கா, [email protected] ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்து சமூக ஊடக தினத்தை ஜுலை 9ம் திகதி அனுஷ்டித்திருந்தது.

சமூக ஊடக மாநாட்டுடன் குறித்த தினத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்ததுடன், இதில் தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த சமூக ஊடக நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில், நிகழ்வின் தொனிப்பொருளான “How to thrive in a World of Fragmented Media” என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

[email protected] ன் டிஜிட்டல் மூலோபாய ஆலோசகர் மேரியன் ஸ்டீவன்ஸ் தனது உரையில், கருமையான சமூக ஊடகம் மற்றும் காணப்படும் நாளிகைகளினுௗடாக நபர் ஒருவர் எவ்வாறான அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். விஜய நியுஸ்பேப்பர்ஸ் டிஜிட்டல் ஊடக பிரிவின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உமைர் வொலிட் தனது உரையில், சமூக ஊடக வலைத்தளங்களில் வழங்கப்படும் பாதகமான பிரச்சாரங்கள் உண்மையில் பாதகமானவையா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தார். அணு வலு சபையின் பணிப்பாளர் சானுக வத்தேகம ஒன்லைன் ஊடகவியல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் நேர்த்தியான மற்றும் பாதகமான விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யாதவ் மதியபரனன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ரெஹான் அல்மேதா மற்றும் [email protected] டிஜிட்டல் ஊடகம் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் பிரிவின் தலைமை அதிகாரி அமித அமரசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தனர். இதன் போது, வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் இடர் நிலைகளின் போது இந்த வசதிகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

‘Meet Up’ நிகழ்வின் போது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட சமூக ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டு, குறித்த தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. விருதுக்கான விண்ணப்பங்கள் http://socialmediacolombo.com/ எனும் இணையதளத்தினூடாக பெறப்பட்டு, ஒருவார காலம் வரை அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.