“ஒரு தவறு செய்தால்” | தினகரன் வாரமஞ்சரி

“ஒரு தவறு செய்தால்”

வாள், கத்தி, தடிகளை கொண்டு ஊரையே ஆட்டி படைக்கிறான் ஒரு ரவுடி. அவனின் ஆட்டத்துக்கும் ஒருநாள் முடிவு வருகிறது. தன் ஒரே மகனின் கண் முன்னால் பகைவன் கையால் துடித்துடித்து சாகிறான்.


ரவுடியின் ஆட்டம் முடிந்து விட்டதா? தந்தையின் சாவை கண்ணால் பார்த்த அவனின் மகன் தர்மா தந்தை வழியிலே எதிரிகளை பகை தீர்க்க வருகிறான் ஒரு ரவுடியாக...
“இந்த உலகத்துல எதையும் கேட்டு எடுத்துக் கொள்ளாமல் தானாகவே எடுத்து கொள்ளணும்” என்று தனக்கென ஒரு தாரக மந்திரத்தை வைத்து கொண்டே தவறுக்கு மேல் தவறு செய்வதையும் அவற்றுக்கு அவன் சொல்லும் விளக்கங்ளையும் கொண்டு வருவதுதான் ஒருதவறு செய்தால் குறுந்திரைப்படம்.


அவன் திருந்தி வாழ அவனுக்குவரும் வாய்ப்புகளை அவன் பயன்படுத்திக் கொண்டானா? அதேநேரம் அவனது மகன் தந்தை வழியில் செல்கிறானா?
எம்மை நோக்கிவரும் சரியான வாய்ப்புகளை உதாசீப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை விளக்கி நிற்கிறது. ரவுடி தர்மா அவ்வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டானா இல்லையா? “ஒரு தவறு செய்தால்” குறுந்திரைப்படம் விளக்குகிறது. இக்குறுந்திரைப்படம் எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு மருதானை சினிசிட்டி திரையரங்கில் திரையிடப்படுகிறது. 

Comments