அநாதையின் ஆதங்கம் | தினகரன் வாரமஞ்சரி

அநாதையின் ஆதங்கம்

எம். முஸ்தக்,

கனேவல்பொல

 

தாயே தாயே

என்னைப் பெத்தாயே

எந்தன் நெஞ்சில்​

நேசம் தந்தாயே

கண்ணால் நான்

உன்னைப் பார்க்கவில்லையே

என்னை விட்டு

எங்கு சென்றாயே

தந்தை மொழி

நானும் கேட்கவில்லையே

அன்னை மடி

சாய்ந்து தூங்கவில்லையே

சிறகுகள் முளைத்தது

பறந்திடத்தானே

பறப்பதற்காக நீ

பயிற்சி தரவில்லையே

பூமியில் ஆயிரம்

சொந்தங்கள் உண்டு

என்னுடைய சொந்தம்

யாரு தெரியவில்லையே

படிப்பினைக் கூறி

பாசமறை பெய்தெனை

பாரைச் சுற்றிக்காட்ட

தந்தை இல்லையே

சோகம் வரும்வேளையில்

சுகமாய்ப் பேசுவே

சோதரன் என்றொரு

உறவும் இல்லையே 

Comments