பின்தங்கிய பகுதிகளில் அதிகளவு தாக்கும் மலேரியா | தினகரன் வாரமஞ்சரி

பின்தங்கிய பகுதிகளில் அதிகளவு தாக்கும் மலேரியா

இலங்கைவாழ் அனைத்து மக்களையும் நல்ல சூழலில் தேகாரோக்கியம் மிக்க பிரஜைகளாக கொண்டுவரும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

2007ம் ஆண்டு முதலாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் திகதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் மலேரியா நோயை தடுக்க, தடுப்பு மருந்து வழங்க, நோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க என்று இந்தியா செலவிடும் தொகை 11,640 கோடி ரூபாய் என்கிறது உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரம்.

உலக மலேரியா ஆய்வறிக்கை 2014 படி, இந்திய மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேர் மிக அதிக அளவில் மலேரியா பாதிப்புக்கு ஆளாகும் பகுதியில் வசிப்பதாகவும், வெறும் 11 சதவிகிதம் பேர்தான் தொற்று பாதிப்பு இல்லாத பகுதியில் வசிப்பதாகவும் தெரிவிக்கிறது.

பொதுவாக, மிகவும் பின்தங்கிய, குடிசை மற்றும் வறுமையில் வாடும் மக்கள் வசிக்கும் பகுதியில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மலேரியாவால் உயிரிழப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மலேரியா காய்ச்சல் தொற்று பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மலேரியா என்பது நுளம்புகள் மூலம் பரவும் ஓர் ஒட்டுண்ணி. இதற்கு பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (plasmodium vivax) என்று பெயர். இந்த ஒட்டுண்ணியை பரப்பும் கொசுவுக்கு அனோபிலஸ் (Anopheles) என்று பெயர்.

அறிகுறிகள்

* தொற்றுள்ள நுளம்புகள் கடித்த, 10-15 நாளில் நோய் வெளிப்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்களுக்கு 7 நாளில் கூட வெளிப்படலாம்.

* மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலை வலி, உடல் வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க் காய்ச்சல் ஏற்படும். உடல் நடுக்கம் எடுக்கும். இது சுமார் அரை மணி நேரம் நீடிக்கும்.

* இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் ஆறு மணி நேரம் நீடிக்கும்.

* மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து, வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு, இதே காய்ச்சல் மறுநாளோ ஒரு நாள்விட்டு ஒரு நாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ மீண்டும் வரும்.

* இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

பரிசோதனை

எளிய ரத்த பரிசோதனை மூலம் மலேரியா காய்ச்சலை கண்டறியலாம். மேலும், எந்த வகையான ஒட்டுண்ணி, மருந்துக்கு எதிராக செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளதா, ஏதேனும் உள் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.

தடுக்க...

* மலேரியா பரவக் காரணம் நுளம்புகள். எனவே, நுளம்புகள் ஒழிப்பு மட்டுமே மலேரியா காய்ச்சலை குறைக்க ஒரே வழி. நுளம்புகள் ஒழிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் அபாயம் பெருமளவு குறைக்கப்படும்.

ஆகவே, மலேரியா நோயை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக சுகாதார நிறுவனம் தீவிர தொண்டாற்றி வருகிறது. இதையொட்டி, மலேரியாவை ஒழிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் பாகுபாடு இன்றி ஒருங்கிணைத்து, செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டெங்குநோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் டெங்குநோய் இனவிருத்தி செய்யுக் கூடிய இடம்களை முற்றாக அழித்துவிடுவதும் இந்த ஆட்கொல்லி நோய் பற்றிய பாதிப்புக்களை மக்களுக்கு வலுவூட்டலுமாக பல்வேறுபட்ட சேவைகளை செய்து வருகின்றது.

அனைத்து வகையான நுளம்புகளின் பெருக்கத்திற்கு பொதுவாக தேங்கி நிற்கும் சிறிய நீரில்தான் பல்கிப் பெருகும் இயல்புகளை நுளம்புகள் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் எமது நாட்டில் நுளம்புகள் பல்கிப் பெருகுவதற்குத் தேவையான சூழலும் வாய்ப்புக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது என்பது நிதர்சனமான விடயமாகும் இதற்கு நாகரீக வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீர் தேங்கி நிற்கும் கைவிடப்பட்ட டயர்கள், பொலித்தீன் பாவனை, பிளாஸ்ரிக் பொருட்கள், சிறட்டைகள் தகர டின்கள் கூரை பீலிகள் இளன்நீர் குரும்பைகள் பூச்சாடிகள் உள்ளிட்ட பல பொருட்கள் அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு கூறுகின்றது .

தற்காலத்தில் இந்த நுளம்புகள் செடி கொடிகளிலும் இன விருத்தி செய்வதுடன் நல்ல நீர் நிலைகளான குடிநீர் கிணறுகளிலும் தமது வாழ்விடத்தினை மாற்றி அமைத்துள்ளதாகவும் சுகாதார பிரிவு கூறுகின்றது.

ஒரு ஆண்டில் சராசரியாக 7இலட்சத்து 75ஆயிரம் பேர் டெங்கு தொற்றினால் இறப்பதாக கடந்த ஆண்டு (2014) வைத்திய அதிகாரிகளின் அறிக்கை கூறுகின்றது இயற்கை சீற்றத்துடன் தற்காலத்தில் நோய் தொற்றுக்களால் மனித குலம் மடிவது கவலைக்குரிய விடயமே ஆகும்.

இதே நேரம் நுளம்புகளால் ஏற்படக் கூடிய மரணங்கள் அதிகரித்து வருவது உலக சுகாதார நிறுவனத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது நுளம்புகளை ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களை சுக தேகியாக மாற்றுவதற்கும் பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டு வருகின்றது.

பல்கிப் பெருகும் நுளம்புகள் பல வகைகளில் உள்ளது அவற்றில் ஈடிஸ் எஜிப்டை, ஈடிஸ் அல்போபிக்டஸ், அனோபிளஸ், கியுலெக்ஸ் போன்ற சில வகை நுளம்புகள் தான் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக உள்ளது.

டெங்கு , சிக்கன்கூன்யா , மலேரியா, ஜப்பானிஸ் என்ஸபலைடிஸ்,மூளைகாய்ச்சல், யானைக்காச்சல் , நோய்கள் உண்டாகின்றது இவற்றில் டெங்கு நோய்தான அன்மைக்காலம் முதல் இந்த நாட்டில் பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறி உள்ளது. எமது நாட்டிலிருந்து மலேரியா நோய் முளு அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் டெங்கு தொற்ரு மருத்துவ துறைக்கு சவால்விடும் ஒரு தொற்று நோயாக உருவெடுத்து வருகின்றது

டெங்கு என்பது ஈடிஸ் நுளம்பு வகையால் பரவும் ஒரு வைரஸ் தொற்று நோயாகும் இத் தொற்றுக்குள்ளானவர்கள் எவ்வித நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்த மாட்டார்கள் ஒரு சிலருக்கு காய்ச்சல் ஏற்படுவதுடன் அவை வேறுபடுத்தப்படாத காய்ச்சல் டெங்கு குரிதிப் போக்கு காய்ச்சல் சாதாரன டெங்குக் காய்ச்சல் என பல நிலைகளாகக் கானப்படும்.

ஈடீஸ் பென் நுளம்பு மூலம் டெங்கு பரவுகின்றது ஈடிஸ் நுளம்பானது தொற்று ஏற்பட்ட மனிதர்களிடம் இருந்து குரிதி உட்கொள்வதன் மூலம் வைரசினை பெற்றுவருகின்றது பொதுவாக டெங்கு நகரப்புறங்களிலேயே ஏற்படுகின்றது.

டெங்கானது உயிராபத்து அச்சுறுத்தல் மிக்க ஒரு நோய். ஆதலால் அதனை ஆரம்பத்தில் இனம்கண்டால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.இது முழுமையாக குணப்படுத்தக் கூடிய நோய்பொதுவாக ஒருவர் டெங்கு நோய்க்கு உள்ளானால் பின்வரும் குணாம்சம்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு கடும் காய்ச்சல் தலைவலி தசைனார் வலி மூட்டுவலி குமட்டல் வாந்திபேதி போன்றவாறான அறிகுறிகளை குறிப்பாக அவதானிக்கலாம்.

இருப்பினும் அதனை குருதிப்பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்.இதன் தாக்கத்தினால் குருதிச் சிறுதட்டு குறைவடைந்து கானப்படும் இதுவே இதன் பிரதானபன்பு இந் நோயினை ஆரம்பத்தில் கண்டறியத் தவறினால் மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

Comments