பரீட்சையில் உச்ச பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு சிங்கர் மடிகணனிகள் அன்பளிப்பு

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில், அண்மையில் இடம்பெற்ற பாராட்டு வைபவம் ஒன்றில் 26 நவீன சிங்கர் மடிகணினிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மார்ச் 28 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஒன்றில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சரான அகில விராஜ் காரியவசம் ஆகியோர் மடிகணினிகளை இந்த மாணவர்களுக்கு கையளித்து வைத்துள்ளனர். சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சார்பில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், நிதிப் பணிப்பாளரான லலித் யட்டிவெல மற்றும் டிஜிட்டல் ஊடக துறையின் சி​ரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளரான சஹான் பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் 12 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும், மற்றும் உயர் தர பரீட்சையில் 7 வேறுபட்ட துறைகளில் முறையே முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் மடிகணினிகள் வழங்கப்பட்டன. நவீன Intel Core i5, அசல் Windows 10 operating system இன் வலுவூட்டலுடன் 7th Generation Processor, 4GB RAM, 1TB Hard Disk, 15.6” HD முகத்திரை, ஒருங்கிணைக்கப்பட்ட HD Web ​ெகமரா, மேம்பட்ட Intel graphics support, Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இந்த மடிகணினிகள் கொண்டுள்ளன.

சிங்கர் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “எமது நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர், கல்வி தொடர்பான தமது கனவுகளை முன்னெடுப்பதை ஊக்குவித்து, வாழ்வில் மகத்துவத்தை அடைந்து கொள்வதற்கு வழிகோலுகின்ற தனது பாரம்பரியத்தை சிங்கர் பெருமையுடன் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
14 + 6 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.