கிரிபத்கொட கிளை வாடிக்கையாளர்களுடனான வர்த்தக உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் NDB

NDB இன் சிரேஷ்ட அங்கத்தவர்கள் மற்றும் கிரிபத்கொடயில் உள்ள தற்போதைய மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்கள் ஆகியோர் அண்மையில் கிரிபத்கொட க்ளாரியன் ஹோட்டலில் சிறந்த வலையமைப்பினையும், நட்புறவினையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் மாலைவேளை சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

“கிரிபத்கொடை கிளையின் இடமாற்றத்துடன் ஒன்றிணைந்ததாக, கிரிபத்கொடயில் உள்ள சமூகத்தினர் எமக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த சந்திப்பினை மேற்கொள்கின்றோம். இந்த சமூகத்தில் பல தேவைகள் உண்டென்பதை கண்டறிந்த நாங்கள், அதன் காரணமாகவே இங்கு வாழும் இம்மக்கள் மீது முதலீட்டினை மேற்கொண்டுள்ளோம். எமது வெற்றியை கொண்டாடியவாறே, உங்கள் ஆதரவுக்கும் எமது நன்றியினை மனமார தெரிவித்துக்கொள்கின்றோம்” என NDB பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமந்த செனவிரட்ண அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

NDB அண்மையில் தமது கிளையினை இல. 540, புதிய ஹூணுப்பிட்டிய வீதி, தலுகம, களனிய என்ற விசாலான, வாடிக்கையாளர்களால் இலகுவாக அணுகக்கூடிய புதிய அமைவிடத்திற்கு இடமாற்றியது. இப்பிரதேசத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள், சிறுவர் சேமிப்புக்கணக்குகள், NRFC/RFC கணக்குகள், நிலையான வைப்புகள், வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள், லீசிங் வசதிகள், கடனட்டை மற்றும் டெபிட் அட்டைகள், வங்கி உத்தரவாதம், மொபைல் வங்கியியல் சேவைகள், வெஸ்டர்ன் யூனியன் பணப்பரிமாற்ற சேவை, இணைய வங்கியியல், 24 மணிநேர அழைப்பு நிலைய சேவை உள்ளிட்ட பன்முக சில்லறை வர்த்தக வங்கியியல் சேவைகளை அளிக்கின்றது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
11 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.