ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா சம்பியன் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா சம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டியில், ரஷ்யாவின் எலெனா வெஸ்னினா வாகை சூடியுள்ளார்.

கலிபோர்னியாவில் இண்டியன் வெல்ஸ் நகரில் முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்: எலெனா வெஸ்னினா சம்பியன்

இப்போட்டியில், டென்னிஸ் உலக தரவரிசையில் 13ஆம் இடத்தில் உள்ள எலெனா வெஸ்னினா, சகநாட்டு வீராங்கனையான ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை எதிர்கொண்டார்.

சுமார் மூன்றுமணிநேரம் நீடித்த இப்பரபரப்பான ஆட்டத்தில் எலெனா வெஸ்னினா, ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை 6 (6)-7 (8), 7-5, 6-4 என வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

இது எலெனா வெஸ்னினாவின் இரண்டாவது சம்பியன் பட்டம் ஆகும். 

Comments