HNB கிராமின் முன்னெடுப்பின் கீழ் சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை | தினகரன் வாரமஞ்சரி

HNB கிராமின் முன்னெடுப்பின் கீழ் சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

இலங்கையில் முன்னணி நிதிச்சேவை நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் HNB கிராமின், தனது நற்பணிச் செயற்திட்டத்தின் கீழ், பொரளை சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ரூபா 3.5 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

HNB கிராமின் முன்னெடுத்துவருகின்ற பல்வேறுபட்ட சமூக சேவைசெயற்திட்டங்களின் வரிசையில், 2017 ஆம் ஆண்டில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.

ஒரே தடவையில் ஐந்து நோயாளிகளுக்கு நோய் கண்டறியும் பரிசோதனையை முன்னெடுக்க இடமளிக்கின்ற ஒலிம்பஸ் போதனா மைக்ரோஸ்கோப் (Olympus Teaching Microscope with 5 heads) மருத்துவ உபகரணம், றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இரத்தப்பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மைக்ரோஸ்கோப் கருவியானது இரத்த மாதிரிகளை கண்காணித்து, சோதனை செய்வதற்கு திறன்மிக்க வழியில் உதவுவதுடன், துல்லியமான பரிசோதனை முடிவுகளையும் தருகின்றது. ஆகவே ஒரே வகையான நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சிசிக்சையை பரிந்துரைப்பதற்கு, வைத்தியர்களால் ஏககாலத்தில் ஐந்து நோயாளிகளை இதன் மூலமாக கண்காணிக்க முடியும். வைத்தியர்கள் இதனை உபயோகித்து மருத்துவக் கற்கையை முன்னெடுக்கின்ற மாணவர்களுக்கு போதனா முறைப் பயிற்சியை வழங்க முடிவதால், இது மருத்துவத்துறை மாணவர்களுக்கு மகத்தான வழியில் நன்மைபயக்கும்.

சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஆதார சிகிச்சைப்பிரிவுக்கு ஏற்கனவே இரு Phillips Capnography extensions கண்காணிப்புத் தொகுதிகள் HNB கிராமின் மூலமாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற அனைத்துச் சிறுவர்களும், அவர்களின் நோய் அறிகுறிகளின் அடிப்படையில் இச்சாதனத்தின் துணையுடன் ஆரம்ப கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பின்னர் உரிய சிகிச்சைககள் வழங்கப்படுகின்றன.

HNB கிராமின் தற்போது அண்ணளவாக நான்கு இலட்சம் வரையான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன், அவர்களின் தேவைகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட நிதியியல் சேவைகளையும், தீர்வுகளையும் வழங்கிவருகின்றது. 

Comments