செபாக் லங்கா | தினகரன் வாரமஞ்சரி

செபாக் லங்கா

இலங்கையின் பாரிய பொதியிடல் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமான செபாக் லங்கா, சாதாரண மற்றும் நவீன பொதியிடல்களுக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிப்பதோடு தற்போது இந்தியாவும் இலங்கையும் சர்வதேச ரீதியில் எய்தக்கூடிய தராதரங்களை முன்வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

ஜேர்மன் பொறியியல் மற்றும் ஜப்பானிய தரம் என்பனவற்றுடன் ஒப்பிடக்கூடிய வகையில் தமது உற்பத்திகளை மேற்கொள்வதனை இந்நிறுவனம் தனது இலக்காகக் கொண்டுள்ளது.

அதேநேரத்தில் அதிசிறந்த தரத்திலான உற்பத்திகள் அதிக விலை கொண்டவை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இருப்பினும் தனித்துவமான புதுமையான பொறியியல் முறைமைகள் மூலம், கட்டுப்படியான விலைகளில் மேற்சொன்ன தராதரங்களை கொண்டதாக செபாக் தயாரிப்புகள் உள்ளன. The Pride continuous sealer அவ்வாறான உற்பத்திகளில் ஒன்று.

பாரிய பொதியிடல் முறைமைகளுடன் ஒப்பிடுகையில் செபாக்கானது மிகச் சிறிய உபகரணத்தினைத் தேர்ந்தெடுக்கக் காரணங்களாவன:வினைத்திறனில் அதிசிறந்த தரத்தினை அடைய எமக்கு விண்வெளி அறிவியல் தேவையில்லை. அதுமிக அடிப்படை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்படலாம். இந்தியத் திறமைகளுக்கு வாய்ப்புகளும் அளவும் ஒரு பொருட்டல்ல.

எங்களால் பல புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமானால் continuous sealer போன்ற சிறிய உபகரணங்களிலும் எங்களால் சிறப்பாகச் செயற்பட முடியும். அடிப்படை மட்டத்திலேயே 'இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதில் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தும் திறன் எங்களுக்கு இருப்பது நிரூபணமாகின்றது.

பொதியிடல் துறையின் கடிவாளங்களில் Continuous sealer களும் ஒன்றாகும். இவை 15 கிராம்கள் தொடக்கம் 15 கிலோ கிராம்கள் வரை பொதிசெய்கின்றன. இவை பிரபல FMCG வர்த்தக நாமம் அடங்கலாக அனைத்து சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

Pride CS ஆனது அதன் எல்லா செயற்பாடுகளிலும் சிப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதனால் டிஜிடல் ரீதியான அறிவுத்திறன் கொண்டதாக உள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கான இணக்கத்தன்மையும் ஏற்படுத்தப்பட்டதால் மேலும் மேம்படுத்தப்படுகின்றது.

பொதியிடலில் பொதியினை ஒழுங்காக மூடுவதே முக்கியமானதாகவுள்ளது. ஒழுங்கற்ற வகையில் பொதிகள் மூடப்பட்டால், அது அதனுள் பொதி செய்யப்படும் உற்பத்தியையே நாசம் செய்து விடும். அவ்வாறு பொதிகளை பொருத்தமான முறையில் மூடுவதற்கு, இரட்டை உணரி தொழில்நுட்பமானது, பயன்படும் வெப்பத்தினைக் ஒரு பாகை செல்சியசினால் கூட்டவோ குறைக்கவோ செய்து கட்டுப்படுத்துகின்றது.

வேகமான மோட்டாருடன் பொதியினை மூடும் செயற்பாடானது, நிமிடத்துக்கு 14 மீற்றர்களாகவுள்ளது. சாதாரணமாக நிமிடத்துக்கு 10 மீற்றர்களே வழக்கில் உள்ளது. இது உற்பத்திகளில் 40% அதிகரிப்பினைக் காட்டியுள்ளது.

சேவை வழங்கலுக்கான செலவீனத்தினை 90% ஆல் குறைத்துள்ளது.

தொழிற்சாலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் முகாமைத்துவம் என்பன சில முக்கிய உதிரிப்பாகங்களின் உற்பத்திகான செலவீனத்தினை 60% முதல் 90% ஆகக் குறைத்துள்ளது. இதனால் செபாக்கின் மேம்பட்ட உற்பத்திகள் சீன உற்பத்திகளின் விலையில் விற்கப்படக் கூடியனவாகவுள்ளன.

இந்தியவில் அது 900 விற்பனையாளர்களை, 13 கிளைகளை, 58 சேவை நிலையங்களைக் கொண்டிருக்கின்றது. இலங்கையிலும் முதல் தர வர்த்தக நாமமாகவிருப்பது செபாக்கே. 

Comments