ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்ற 362,000 அமெ.டொலர் நிதி தேவை | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்ற 362,000 அமெ.டொலர் நிதி தேவை

மஞ்சுளா பெர்ணான்டோ

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்களை 2018 , 2019 ஆகிய இரண்டு வருடகாலங்களுக்குள்ளும் நிறைவேற்றுவதற்கு மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 362,000 அமெரிக்க டொலர்களைத் திரட்ட வேண்டியிருப்பதாக மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அறிவித்துள்ளார்..

உறுப்புரிமை நாடுகளும் இத் தீர்மானத்துக்கான இணை அனுசரணையாளர்களும் இந்நிதியினை திரட்டவேண்டும் என எதிர்பார்க்கப்பபடுவதாக வௌியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

நல்லிணக்க ஊக்குவிப்பு மற்றும் இலங்கையில் பொறுப்புக் கூறலும் மனித உரிமை பேணப்படுதலும் தொடர்பாக , 2015 செப்டம்பர் மாத, மனித உரிமை ஆணைக்குழுவின் 30/1 தீர்மானத்தினை நிறைவேற்ற, இல்ஙகைக்கு கால அவகாசம் வழங்க அமெரிக்காவும் மற்றும் ஏனைய நாடுகளும் பரஸ்பரம் இணக்கம் தெரிவித்திருந்தன.

இந்தத் தீர்மானம் எந்தவிதமான திருத்தங்களோ மாற்றங்களோ இன்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வௌிவிவகார அமைச்சின் தகவலின்படி, ஆவணங்களைத் தயாரிப்பதற்கென 64ஆயிரம் அமெரிக்க டொலரும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பணியாளர்கள் இலங்கையில் பணிகளை மேற்கொள்வதற்கென மேலும் 38,100 அமெரிக்க டொலரும் பொதுச் செயற்பாடுகளுக்ெகன 18,000 அமெரிக்கா டொலரும் ஒதுக்கப்படும்.

தற்காலிக உதவிகளை வழங்கவென ஆகக் கூடுதல் தொகையாக 241,500 அமெரிக்க டொலரும் ஒதுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்குவதற்கான பிரேரணை கடந்த மார்ச் 23ஆம் திகதி வாக்ெகடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மொன்டேனெக்ேரா முதலான நாடுகள் பிரேரணையைச் சமர்ப்பித்திருந்தன.

Comments